கொரோனா எதிரொலி: சிவலிங்கத்துக்கு மாஸ்க் அணிவித்து விநோத வழிபாடு

கொரோனா வைரஸ் எதிரொலியாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் கடவுள் உருவத்திற்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி பேசிய கோவில் பூசாரி கிருஷ்ண அனந்த பாண்டே கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காசி விஸ்வநாதருக்கு நாங்கள் முகக்கவசம் அணிவித்து உள்ளோம் என்றார்.

கொரானா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கடவுள் சிலைகளை யாரும் தொட வேண்டாம் என்று பொதுமக்களிடம் வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

இந்த கோவிலில் பூசாரி மற்றும் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தபடி இறைவழிபடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே