டெல்லியில் வரும் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 303 தொகுதிகளில் வென்று பாரதிய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றது இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் சந்தித்த நரேந்திர மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார் இதனை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தார் , வரும் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது குறிப்பாக வெளிநாட்டை சேர்ந்த தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
- மின் கட்டணம் உயர்வு :வாக்களித்த மக்களுக்கு புதுச்சேரி அரசு துரோகம் செய்துள்ளது :வையாபுரி மணிகண்டன்
- திருமாவளவனின் வெற்றியை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தனர் : வைகோ