ரஜினியின் எந்த நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்வோம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ரஜினியின் எந்த நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்வோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது என அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் உடல்நிலை குறித்தும் அவரது அரசியல் பின்வாங்கல் குறித்தும் சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்று வெளியானது.

ஆனால் அந்த அறிக்கை தன்னுடையது இல்லை என்றும் அதில் தனது உடல்நிலை பற்றி வந்த செய்தி அனைத்தும் உண்மைதான் என்றும் ரஜினி தெரிவித்தார். இதையடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் நிகழுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ” ரஜினியின் எண்ணம் நல்ல எண்ணம். அவர் அரசியலுக்கு வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் வராவிட்டாலும் ஏற்றுக்கொள்வோம்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகமும், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவும் பாதுகாப்பாக உள்ளது.

யாரோ மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறவது தவறு; மனு தர்மத்தில் சில நல்ல கருத்துகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே