கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. என் லவ்வர் வந்துடட்டும்..; மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த மணமகள்..!!

நீலகிரியில் தாலிகட்டும் நேரத்தில், காதலன் வந்து தன்னை அழைத்துச்செல்வதாக கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள மட்டகண்டி கிராமத்தை சேர்ந்தவர் அனந்த். இவருக்கும் துனேரி கிராமத்தை சேர்ந்த பிரியதரிஷினி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த 29ஆம் தேதி மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

இந்த விழாவில் இருவீட்டார் மட்டுமே கலந்துகொண்ட நிலையில், ஆனந்த் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் மணமேடையில் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில், முகூர்த்த வேளையில் மணமகன் ஆனந்த் தாலி கட்ட முயன்றபோது, பிரியதர்ஷினி தீடீரென ஒரு மணிநேரம் அனைவரும் காத்திருங்கள், எனது காதலன் வந்து கொண்டிருக்கிறான் என்று தெரிவித்தார்.

இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். தொடர்ந்து பேசிய பிரியதர்ஷினி, தனது காதலன் பார்த்திபன் வந்து, தன்னை அழைத்து செல்வதாக கூறி மணமேடையில் இருந்து எழுந்தார்.

பெரியோர்கள் எவ்வளவோ அறிவுரை கூறியும் மணப்பெண் கேட்காததால், அந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதனிடையே, பிரியதர்ஷினி சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அங்கு பார்த்திபன் என்பவரை காதலித்து வந்தது பின்னர் தெரியவந்தது.

இதனிடையே, தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே