தமிழகத்தில் மதுரை உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சனிக்கிழமை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்

விரகனுர் அணை, மதுரை ஐஎஸ்ஆர்ஒ தலா 10 செ.மீ மழையும், மதுரை விமான நிலையில் 8 செ.மீ மழையும், வாலிநோக்கம், வத்திராயிருப்பு, மதுரை தெற்று தலா 7 செ.மீ மழையும், விளாத்திகுளம், கோவில்பட்டி தலா 5 செ.மீ மழையும், கோவில்பட்டி, சாத்தூர் தலா 4 செ.மீ மழையும், பிளவக்கல், சோழவந்தான், எட்டயபுரம், சித்தாம்பட்டி தலா 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே