நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது.ஆனால் இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைக்கண்டித்து போராட்டங்கள் மிகவும் தீவிரகமாக நடைபெற்றது.ஒரு புறம் ஆதரவாகவும் போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

அந்த வகையில் தான் கோவை மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாலத்தில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் குடியுரிமை திருத்த சட்டத்தை குறித்து பேசினார். மத்திய அரசு மீது பல விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனிடையே தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 22-ஆம் தேதி கோவை மாவட்டத்தில் நடைபெற்ற குடியுரிமை போராட்டத்தில் அரசுக்கு எதிராகவும், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வகையில் பேசியதாகவும் கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் விற்பனையை கண்காணிக்க ஒழுங்குபடுத்த போலீஸ் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சீமான் கருத்து கூறியிருந்த நிலையில் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே