உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை – எல்.முருகன்..!!

உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில், வேல் யாத்திரை கடந்த ஆறாம் தேதி திருத்தணியில் தொடங்கப்பட்டது.

இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி வேறு யாத்திரையை நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் தனது பரப்புரையை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கினார்.

முதற்கட்டமாக அவர் திருக்குவளையில் பரப்புரையை தொடங்கிய நிலையில் கைது செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து அவர் குத்தாலம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், ” தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து தலைமை தான் முடிவு செய்யும்.

உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. வேல் யாத்திரைக்கு பெருகிய ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் உதயநிதி பரப்புரையை தொடங்கினார் என்றார்.

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகையின் போது அதிமுக – பாஜக கூட்டணி தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே