வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது – தலைமை தேர்தல் அதிகாரி

வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்யமுடியாது; தமிழகத்தில் மே 2ம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, “வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திவருகிறது. 

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம். வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்களோ, ஆதரவாளர்களோ கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்யமுடியாது என்று தெரிவித்துள்ள சத்ய பிரதா சாகு, அதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு கால்குலேட்டர் போலதான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் உள்ள பெண் காவலர்களுக்காக ஒரு சில இடங்களில் கண்டெய்னரில் கழிப்பறைகள் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிட்ட தலைமைத் தேர்தல் அதிகாரி, வாக்கு எண்ணும் மையங்கள் அருகே வரும் வாகனங்கள் குறித்து கண்காணிக்கப்படும் என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே