மரம் வளர்ப்பு குறித்து பேசிய விஜய்க்கு விவேக் பாராட்டு

பிகில் இசை வெளியீட்டு விழாவில் மரம் வளர்ப்பு குறித்து பேசிய நடிகர் விஜய்க்கு நடிகர் விவேக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை எம்ஜிஆர் நகரில் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவேக் நடிகர்களும், அரசியல் தலைவர்களும் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசு பள்ளிகளில் மரக்கன்று நட ஊக்குவிக்கப்படுவது போல், தனியார் பள்ளி மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் வளர்ச்சி திட்டங்களுக்காக மரங்கள் அழிக்கப்பட்டால் ஒரு மரத்திற்கு பதில் பத்து மரங்கள் நட வேண்டும் என்பது விதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே