வைரல் வீடியோ : போக்குவரத்து சிக்னலில் நடனமாடிய இளம்பெண்..!!

மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் போக்குவரத்து சிக்னலில் பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் லைக், ஷேர்க்காக இளைஞர்கள் பல உத்திகளை கையாள்கின்றனர். அதிலும் சிலர் ரிஸ்க் எடுத்து வீடியோ வெளியிடுகின்றனர். அந்த வகையில் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரில் உள்ள முக்கிய சாலைகள் சந்திப்பில் இளம் பெண் ஒருவர் நடனமாடும் காட்சி வேகமாக பரவி வருகிறது. போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது அவர் நடனமாடுகிறார். அவரை வாகன ஓட்டுநர்கள் வியப்புடன் பார்த்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

வீடியோ பதிவு ஒன்றிற்காக திட்டமிடப்பட்டு இந்நடனம் நிகழ்த்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இது எப்போது நடந்தது எனத் தெரியவில்லை. எனினும் இதை அறிந்த மத்திய பிரதேச அமைச்சர் அப்பெண் மீது மோட்டார் வாகன சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அந்த பெண்ணின் பெயர் ஸ்ரேயா கல்ரா என தெரியவந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே