விகாஸ் துபே என்கவுன்ட்டர் – திட்டமிட்டு போட்டு தள்ளிய சேலத்து ’சிங்கம்’!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மிகுந்த பரபரப்புக்கு ஆளாக்கிய சம்பவம் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகும். இதில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே தலைமறைவாக இருந்தார். இவர் மீது ஏராளமான கொலை வழக்குகள் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன. ஆனால் போலீசார் பிடியில் சிக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். சமீபத்தில் இவரை பிடிக்கும் முயற்சியின் போது தான் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. சம்பந்தப்பட்ட குற்றவாளியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்த போலீசார் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசாரின் நடவடிக்கை தீவிரமானது. துபேவின் மனைவி மற்றும் குடும்பத்தாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மக்களை பாதுகாக்கும் போலீசாரையே கொலை செய்யும் அளவிற்கு துணிந்துவிட்டால் ஆட்சி அதிகாரம் சும்மா இருக்குமா? தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கில் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, மத்தியப் பிரதேசம் என விகாஸ் துபே ஓட போலீசாரும் விரட்டிச் சென்றுள்ளனர். இதன் பின்னணியில் பல்வேறு முக்கிய ஆதாரங்களாக துபே பயன்படுத்திய கார், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவை இருந்துள்ளன. கடைசியாக மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் கோவில் ஒன்றில் வழிபடச் சென்ற போது சிக்கிக் கொண்டார்.

அவரைப் பிடித்து விகாஸ் துபே தானா என்று உறுதிப்படுத்திக் கொண்டனர். பின்னர் உஜ்ஜைனியில் இருந்து கான்பூரில் இன்று காலை காரில் அழைத்து வந்தனர். இந்நிலையில் கான்பூர் அருகே வந்த போது போலீசாரின் பாதுகாப்பு வாகனம் ஒன்று தடம்புரள துபே விழித்துக் கொண்டார். உடனே போலீசாரின் துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பியோடும் முயற்சி நடந்தது.

அதற்குள் போலீசார் எச்சரிக்கை செய்ய இருதரப்பிலும் மாறி, மாறி குண்டுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதன் விளைவு துபேவிற்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் கேங்ஸ்டரின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. இத்தகைய நீண்ட தேடுதல் வேட்டை, கைது, என்கவுன்ட்டர் என அதிரடியான திட்டங்களை தீட்டி போலீசாரை வழிநடத்திச் சென்று வெற்றிகரமாக நடத்திக் காட்டியது ஒரு தமிழர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ?

ஆம், அவரது பெயர் தினேஷ் குமார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பி.எஸ்.சி அக்ரி முடித்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். 2009ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 33 வயது இளம் அதிகாரி ஆவார். இளம் ரத்தம் சூடாகத் தான் இருக்கும் என்பது விகாஸ் துபேவின் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்ததில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே