விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. விஜய்- விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் என்பதால் இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது நடிகர் விஜய்யை காண ரசிகர்கள் பட்டாளம் குவிந்தனர்.

அப்போது விஜய் அவர்களை சந்திப்பதற்காக வேன் ஒன்றின் மீது ஏறி செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் அதனை அதிகம் ரீட்வீட் செய்ய ஆரம்பித்தனர்.

அன்றைய தினம் அந்த செல்ஃபி தீயாக பரவியது.

இந்நிலையில் நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபியை இந்தியாவில் 2020ம் ஆண்டில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக, 2019ம் ஆண்டிலும் நடிகர் விஜய் பகிர்ந்திருந்த பிகில் திரைப்பட போஸ்டர் அதிக அளவு ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டாக இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 2020ம் ஆண்டுக்கான அதிக லைக்ஸ் பெற்ற ட்வீட்டாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளதாக அறிவித்த பதிவு இடம்பிடித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே