பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 87 நாட்களில் இதுவரை சொல்லும் படியாக எதுவும் நடக்கவில்லை.

இதுவரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் மீதம் 9 பேர் ஆட்டத்தில் உள்ளனர்.

கன்டென்ட் இல்லாமல் திணறும் பிக் பாஸ் ஃப்ரீஸ் டாஸ்க்கை ஆரம்பித்துள்ளார்.

நேற்று ஷிவானியின் அம்மா உள்ளே வந்து ஷிவானியை வெளுத்து விட்டு போக, ட்விட்டரில் ஷிவானி ஹேஷ்டேக் ட்ரெண்டாகியது.

அடுத்து பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த பாலாவின் அண்ணன் ரமேஷ் ஜாலியாக அரட்டை அடித்து விட்டு சென்றார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், ரம்யாவின் அம்மா ஸ்டோர் ரூம் வழியாக உள்ளே வருகிறார்.

அவருடன் ரம்யாவின் தம்பியும் வருகிறார். ரம்யா அழுகுற கேரக்டர் இல்ல என்பதை பதிய வைக்கும் அவரின் தாய், எதுவா இருந்தாலும் ஓபனா பேசிடுங்க என்று அட்வைஸ் கொடுக்க, ரம்யாவின் தம்பியோ, நீ இந்த வாரம் வெளியே வந்தா அதுக்கு காரணம் நீ இல்ல என்று சொல்ல, வெளியே வர நிலைமை இருக்கா? என்று கேட்கும் படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே