வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு பண உதவி செய்த விஜய்சேதுபதி!

மறைந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய்சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

விஜய் தொலைக்காட்சியில் வடிவேல் பாலாஜி எனும் அடைமொழியுடன் மக்கள் மனதை கவர்ந்த காமடி நடிகராக வலம் வந்தவர் தான் பாலாஜி.

நேற்று இவர் திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவருடன் இணைந்து பணியாற்றிய விஜய் டிவி பிரபலங்கள் பலர் நேரில் வந்து பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இன்று காலை சென்னை சேத்துப்பட்டியில் உள்ள வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும் வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த விஜய் சேதுபதி நிதியுதவியும் அளித்தார் .

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே