கேரளாவின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக முன்னாள் ஊடகவியலாளருமான வீணா ஜார்ஜ் பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் தொகுதியில் இருந்து 2 ஆவது முறையாக எம்எல்ஏ ஆகி உள்ளார். முந்தைய அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கேகே ஷைலஜா, கேரளாவில் கொரோனா தடுப்பு வீரப்பெண்மணியாக கருதப்பட்டார்.
ஆனால் புதிய அமைச்சரவையில் அவர் உட்பட பழைய அமைச்சர்கள் யாருக்கும் இடம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் பினராயி விஜயன் தலைமையிலான 21 பேர் அடங்கிய அமைச்சரவையில் வீணா ஜார்ஜ் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி ஏற்பார் என்கிறார்கள்.