வருமுன் காப்போம் திட்டம் – ரூ.3.85 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்திற்கு ரூ.3.85 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி ஆட்சி காலத்தில் ‘வருமுன் காப்போம் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல்வர் மு.க.,ஸ்டாலின் அவர்கள், தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வாழப்பாடி அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் ‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை’ தொடங்கி வைத்தார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடர்ந்து, வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தின் மூலம், திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்திற்கு ரூ.3.85 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் என்னென்ன சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும் என்ற விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே