பிரபல நடிகரின் அடுத்தப் படத்தில் வனிதா விஜயகுமார்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிஸியாகியிருக்கிறார் வனிதா.

நடிகை வனிதா விஜயகுமாரின் அடுத்தப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான வனிதா விஜயகுமார், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமானார். அதில் மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவித்து வந்தார். அந்நிகழ்ச்சி முடிந்ததைத் தொடர்ந்து, விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி சீசன் 1-ல் கலந்துக் கொண்டு, டைட்டிலை தட்டிச் சென்றார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிஸியாகியிருக்கிறார் வனிதா. பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள ‘காற்று’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அவர், நடைக்கடை மனிதர் ஹரி நாடாருடன் ‘2கே அழகானது காதல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே இன்னுமொரு முக்கியப் படத்தில் வனிதா நடிப்பதாக தெரிகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே