ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு..! – ரஜினி அறிவுரை

வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் கரோனா வைரஸ், வருங்காலங்களில் பலவிதங்களில் பல கடுமையான வேதனைகளைத் தரும் என ரஜினி கூறியுள்ளார்.

கரோனா பரவல் தொடர்பாக ரஜினி மன்ற உறுப்பினர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார் ரஜினி.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இடைவிடாமல் உதவிகளைச் செய்து கொண்டிருக்கும் ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடிபட்ட உடனேயே வலி தெரியாது. இப்போது நமக்குப் பட்டிருக்கும் கரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. 

வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போலிருக்கிறது.

இதனுடைய வலி வருங்காலங்களில் பலவிதங்களில் பல கடுமையான வேதனைகளைத் தரும்.

உங்களுடைய குடும்பத்தினரின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களைப் பாதுகாப்பதுதான் உங்களுடைய அடிப்படைக் கடமை.

எந்தச் சூழலிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் முகக்கவசத்தை அணியாமலும் இருக்காதீர்கள். ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு எனக் கூறியுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே