ஜூலி சொல்ல வேண்டியதை சரியான நேரத்தில் சொன்ன வனிதா

மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார் ஜூலி. அதன் பிறகு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஜூலி சொன்ன பொய்யை பார்த்து அவரை போலி, போலி என்று கிண்டல் செய்தார்கள், இன்னும் கிண்டல் செய்கிறார்கள்.
மேலும் ஜூலி என்ன ட்வீட் போட்டாலும் கேவலமாக கமெண்ட் போடுகிறார்கள். இதை பார்த்து கடுப்பான ஜூலி சில சமயங்களில் சமூக வலைதளவாசிகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்திருக்கிறார். ஆனால் அனைவருக்கும் பதில் அளிக்க முடியாமல் தற்போது ஜூலி இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றுவிட்டார். இன்ஸ்டாகிராமில் ஜூலியை திட்டுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் சொன்ன பொய்க்காக இன்னும் ஜூலியை போலி என்று திட்டுகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனும் துவங்கப் போகிறது ஆனால் ஜூலியை திட்டுவதை நிறுத்தவில்லை. ஜூலியை மட்டும் அல்ல பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமாரையும் சமூக வலைதளவாசிகள் விளாசுகிறார்கள்.

வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நடந்து கொண்டதை பார்த்துவிட்டு தற்போதும் அவரை கேவலமாக திட்டுகிறார்கள். இதை பார்த்த வனிதா விஜயகுமார் கூறியிருப்பதாவது,

பிக் பாஸ் வீட்டில் நான் பேசியது பற்றி கமெண்ட் பண்ணீங்க. அது ஒரு கேம் ஷோ. முகென் ராவ் என் தம்பி தான். அவனுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கு. அதை எல்லாம் தாண்டி வந்திருக்கான். அவன் கோபத்தில் சேரை தூக்கி அடிக்கப் போனான். அவனுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சீங்க.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு கேம். அதை பற்றி தற்போது பேசுவது முட்டாள்தனம். தேவையில்லாமல் யாரை பற்றியும் பேசக் கூடாது. நாளைக்கு இருப்போமா என்று கூட தெரியாது. வார்த்தையை விடுவது ரொம்ப ஈஸி. பேசுங்க, கமெண்ட் பண்ணுங்க ஆனால் கேவலமாக பேசாதீங்க. ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். கர்மா சும்மா விடாது. பிக் பாஸ் வீட்டில் இருந்த யாருமே தவறானவர்கள் இல்லை என்றார்.

வனிதா சொன்னதை பார்த்தவர்கள் கூறியதாவது,

அக்கா சொல்வது சரி தான். பிக் பாஸ் வீட்டில் யாரும் அவர்களாக இருப்பது இல்லை. கொடுத்த ஸ்க்ரிப்ட் படி நடந்து கொள்கிறார்கள். அதில் வனிதா அக்காவை பிக் பாஸ் வில்லியாக்கிவிட்டார். ஜூலியை போலியாக்கிவிட்டார். பிக் பாஸ் செய்த காரியத்திற்காக வனிதாக்கா, ஜூலியை திட்டுவது நியாயம் இல்லை.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் நாளை உயிருடன் இருப்போமா என்பதே உறுதி இல்லை. இந்நிலையில் அடுத்தவர்களை திட்டி என்ன சாதிக்கப் போகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
வனிதா பேசியதை பார்த்த ஜூலியின் ஆதரவாளர்கள் கூறியதாவது,

பிக் பாஸ் ஒரு கேம் ஷோ. அதில் போட்டியாளர்கள் நடந்து கொள்வதை வைத்து அவர்களை மதிப்பிடக் கூடாது. நிஜத்தில் அவர்கள் நல்லவர்களாக இருக்கலாம் அல்லவா?. ஜூலி பாவம். அவரை இத்தனை ஆண்டுகளாக திட்டியது போதும். அவரை கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்கள். திட்டுக்கு பயந்து ஜூலி ட்விட்டர் பக்கம் வருவதையே குறைத்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே