கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி சான்றிதழை சரிபார்த்த பிறகே சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், தடுப்பூசி போடாதவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருவதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் காத்திருக்கின்றன. விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே