தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் பாஜக தரப்பில் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் பங்கேற்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக – பாஜக போட்டியிடும் இடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடைய, சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்து பேசியிருந்தார். ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்ற கூறப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு அதனை உறுதி செய்தது.
இந்த சூழலில், 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- பாஜக இடையே எந்தெந்த இடங்களில் போட்டிடுவது என பங்கீடு குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.