அமெரிக்க அதிபர் தேர்தல் – ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மாநில அரசு உத்தரவு..!!

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளரும், அதிபருமான டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அலாஸ்கா, நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஜார்ஜியா மாகாணத்தில் இருவருக்கும் இடையே பெரிய அளவில் வாக்குகள் வித்தியாசமின்றி இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது ஜோ பிடன் டிரம்ப்பை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் இருந்தார்.

இதையடுத்து ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ட்ரம்ப் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்த நிலையில் தற்போது மாகாண அரசு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த முறை நடந்த அமெரிக்கத் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை நடப்பது இதுவே முதல்முறை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே