எந்த ஒரு இந்திய குடிமகனும் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கும் விதத்தில் மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 மற்றும் 35 ஏ என்ற சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்ததுடன், யூனியன் பிரதேசமாக மாற்றியது.

அதற்கு முன்பு வரை அங்கு அசையா சொத்துக்களை வெளி நபர்கள் வாங்க முடியாத நிலை இருந்தது.

தற்போது ஜம்மு காஷ்மீர் அல்லாத இந்திய குடிமகன்களும் அங்கு நிலம் வாங்கும் விதத்தில் 26 சட்டங்களை ரத்து செய்தும் மாற்றம் செய்தும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, விவசாய நிலத்தை மருத்துவமனை மற்றும் கல்வி தவிர்த்து வேறு பயன்பாட்டுக்கு மாற்ற முடியாது என்று தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே