உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தீர்ப்பு வழங்குகிறது டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.,வால் சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் தொடர்பான வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், சிறுமி ஒருவர் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்காரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

இதுகுறித்து புகாரளித்த சிறுமியின் தந்தை கொலை செய்யப்பட்டார்.

மேலும் வழக்கு விசாரணைக்காக சிறுமியும், அவரது வழக்கறிஞரும் நீதிமன்றத்திற்கு சென்ற போது, அவர்கள் சென்ற வாகனம், எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்களால் விபத்துக்குள்ளாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிறுமிக்கும், அவரது வழக்கறிஞருக்கும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, எம்.எல்.ஏ மீது சி.பி.ஐ. 5 வழக்குகள் தொடர்ந்துள்ளது.

சி.பி.ஐ. தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுமென்று நீதிபதி திரு. தர்மேஷ் ஷர்மா தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே