பாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே உலைதான்

நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமானவை தான். என்ன தான் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானவையாக இருந்தாலும், குறிப்பிட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது.

அப்படி சாப்பிட்டால், அது உடல் நலத்தை பாதிக்கும். சில சமயம் உயிருக்கு கூட ஆபத்தினை ஏற்படுத்தலாம்.

இதில் பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

பட்டியலிடப்பட்டுள்ளது. இனிமேல் இவற்றை பாலுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்.

பால் மற்றும் பழங்கள்


பழங்களான வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்றவை செரிமானமாகும் போது வெப்பத்தை உற்பத்தி செய்யும்.

ஆனால் பாலோ குளிர்ச்சித்தன்மை கொண்டது. இந்த பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது, வயிற்றினுள் சென்று உடைக்கப்படும் போது அது புளித்துவிடும்.

Neighborhood Efforts Working To Overcome Food Deserts | WVXU

எதிரெதிர் தன்மை கொண்டவைகளை உட்கொள்ளும் போது, அது வயிற்றில் கடுமையான எரிச்சலை உண்டாக்கும்.

மேலும் இது குடல் பகுதிகளில் ஒருவித ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, வயிற்றில் டாக்ஸின்களின் அளவை அதிகரிக்கும். இதன் விளைவாக சளி, இருமல், அலர்ஜி போன்றவைகள் ஏற்படும்.

ஆகவே இந்த பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்.

பால் மற்றும் இறைச்சி


பொதுவாக செரிமான மண்டலம் பாலை செரிப்பதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும்.

இந்த பாலை, புரோட்டீன் நிறைந்த இறைச்சியுடன் சேர்த்து சாப்பிட்டால், அது செரிமான மண்டலத்தில் அதிகளவு அழுத்தத்தைக் கொடுக்கும்.

ஏற்கனவே பால் செரிமானமாவதற்கு நேரமாகும். அத்துடன் இறைச்சியை உட்கொண்டால், அதை செரிப்பதற்கு போதிய செரிமான அமிலம் கிடைக்கப் பெறாமல், அஜீரண பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.

பால் மற்றும் மீன்


தமிழர்களின் ஆயுர்வேதத்தின் படி, பாலையும், மீனையும் ஒன்றாக எடுத்தால், அது உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிக்குமாம்.

ஆயுர்வேதத்தின் படி, உடலில் நோய்கள் வருவதற்கு டாக்ஸின்களின் தேக்கம் தான் முக்கிய காரணம்.

பாலையும், மீனையும் ஒன்றாக உட்கொள்ளும் போது, அது சருமத்தில் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

Fish and Milk: Toxic Combination or myth? - Times of India

மேலும் இந்த காம்பினேஷன் உடலின் பல்வேறு பகுதிகளில் தடைகளை ஏற்படுத்தும். அதுவும் இரத்த ஓட்டப் பிரச்சனைகள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆகவே இந்த கலவையையும் அறவே தவிர்க்க வேண்டும்..

Related Tags :

milk and fish| title

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே