மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி..!!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கல் தற்போது இந்தியாவில் குறைந்து வந்தாலும் மத்திய அமைச்சர்கள், மாநில கவர்னர்கள் போன்றோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தி தாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஸ்மிருதி இரானி, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை முன்னதாகவே பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே