#BREAKING : தமிழகத்தில் இன்று (ஜூலை 09) 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 65 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று புதிதாக 4,231 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 4,231 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,26,581ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,228 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 65 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம், இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 78,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே