ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற மும்பை கேப்டன் கைரன் பொலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பையில் மாற்றம் எதுவுமில்லை.

காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களில் விளையாடாத ரோஹித் சர்மா இம்முறையும் களமிறங்கவில்லை.

பெங்களூருவில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நவ்தீப் சைனி, ஆரோன் பின்ச், மொயீன் அலி ஆகியோருக்குப் பதில் ஷிவம் துபே, ஜோஷ் பிலிப்பி, டேல் ஸ்டெயின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே