சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான வரும் 14-ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் என்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவித்துள்ளனர். 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் வரும் 14- ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

வரப்போகின்ற சட்டமன்ற தேர்தல் தொடர்பாக என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்பது பற்றி கடந்த நவம்பர் மாதம் 20-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்களுடன் நிர்வாகிகள் தவறாமல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே