சுய தனிமையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்… இதுதான் காரணமாம்!!

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இவர், மத்திய அமைச்சர் அமித்ஷாவை கடந்த சனிக்கிழமை சந்தித்தது தான் காரணம்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், தனது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களில் தன்னை சந்தித்த அனைவரும் தயவுசெய்து தனிமைப்படுத்தி பரிசோதித்துக் செய்து கொள்ளுமாறு தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இது குறித்து ரவிசங்கர் பிரசாத் ட்வீட் செய்துள்ளார். அதில், ” நான் நன்றாக இருக்கிறேன்.

கடந்த சனிக்கிழமை மாலை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக நான் அமித் ஷா- வை சந்தித்தேன். இதனால் நெறிமுறையைப் பின்பற்றி நான் சில நாட்கள் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நான் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன், யோகா மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட வழக்கங்களைப் பின்பற்றுகிறேன். மேலும் புத்தகங்களைப் படிப்பது மற்றும் கிளாசிக்கல் இசையை ரசிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே