மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவர், கத்திப்பாரா, கிண்டி, ஆளுநர் மாளிகை, அடையார் வழியாக லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலை 1.55-க்கு அடைகிறார்.

அங்கிருந்து மாலை 4.25-க்கு புறப்பட்டு வாலஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்திற்கு செல்கிறார்.

அங்கு எம்.ஜி.அர், ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வும், ரூ.1,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதன்பின்னர், மாலை 6.00 மணிக்கு மீண்டும் லீலா பேலஸ் வருகிறார்.

அங்கு மாநில பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். 

மறுநாள் காலை 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையம் செல்கிறார்.

இன்று பிற்பகல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ள நிலையில் #GoBackAmitShah எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

ஏற்கனவே பிரதமர் மோடி, அமித்ஷா வரும் போதெல்லாம் திரும்பிச் செல்லுங்கள் என்று தமிழகத்தில் ட்ரெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில் இன்றும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே