பொன்னம்பலத்திற்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழப்பு: கமலை தொடர்ந்து ரஜினிகாந்த் மிகப்பெரிய உதவி.

சிறுநீரகம் செயலிழந்து சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ரஜினிகாந்த் உதவி செய்துள்ளார்.
90களில் தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். அவர் சினிமாவுக்கு சண்டை கலைஞராக வந்து அதற்கு பிறகு படிப்படியாக முன்னேறி வில்லனாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்தவர்.
பல டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார் அவர். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போன பிறகு அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அவர். ஒரு பிரபல கட்சியில் அவர் இணைந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பிறகு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என நேற்று முன்தினம் செய்தி வெளியானது. அவர் மருத்துவமனையில் இருக்கும் வீடியோவும் வெளி வந்திருந்தது. அது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது.

அவரது சிகிச்சைக்காக கமல்ஹாசன் உதவி செய்தார் என்றும் அப்போது கூறப்பட்டது. மேலும் பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளும் தற்போது படித்து வருகின்றனர்.அவர்களது படிப்பு செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக கமல்ஹாசன் கூறியிருந்தார்.

இந்நிலையில் பொன்னம்பலத்தின் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல் ஹாசனை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பொன்னம்பலத்திற்கு உதவி செய்துள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆகும் செலவை ரஜினிகாந்த ஏற்றுக் கொண்டுள்ளார். சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருக்கும் பொன்னம்பலத்திற்கு உரிய நேரத்தில் ரஜினிகாந்த் செய்துள்ள உதவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் பொன்னம்பலம் தற்போதைய தலைமுறையினரும் அதிகம் பேசப்படும் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நாட்டாமை படத்தில் வரும் பஞ்சாயத்து சீன் தொடங்கி அந்த படத்தில் பொன்னம்பலத்தின் மிரட்டலான நடிப்பு பெரிய அளவில் பேசப்படுகிறது என்பது அனைவரும் அறிந்தது தான்.

மிகக் கொடூரமான வில்லனாக திரைப்படங்களில் நடித்திருந்தாலும். பொன்னம்பலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவரது உண்மையான குணம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவருக்கு ரசிகர்கள் அதிக அளவில் வாக்குகளும் அளித்தார்கள். அவர் பேசும் விதம் பற்றி மற்ற போட்டியாளர் புகார் அளித்தாலும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். அவரைப் பல வாரங்கள் வீட்டை விட்டு வெளியேற்ற நாமினேஷன் செய்யப்பட்ட நிலையிலும் அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே