விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் வெள்ளிக் கிழமை பதவியேற்க உள்ளனர்.
கடந்த 21ம்தேதி விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது இருபத்து நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த இருவரும் வாழ்த்து பெற்றனர்.
கடந்த 29ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற இருந்த நிலையில், அன்றைய தினம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க போராட்டம் நடைபெற்று வந்ததால், பதவி ஏற்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் இருவரும் நாளை பதவி ஏற்க உள்ளனர். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.