ட்விட்டரில் புதிதாக ஹைட் ரிப்ளைஸ் (Hide Replies) என்ற அப்டேட் உலகம் முழுவதும் உள்ள பயனாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
ரீ-ட்வீட் என்ற அப்டேட்க்குப் பின்னர் ட்விட்டர் வெளியிட்டுள்ள மிகப்பெரும் அப்டேட் ஆக ஹைட் ரிப்ளைஸ் (Hide Replies) அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதலே இந்தச் சேவை நடைமுறைக்கு வந்துள்ளது.
வரவேற்புக்கு இணையாக விமர்சனங்களையும் இந்த ஹைட் ரிப்ளைஸ் (Hide Replies) அப்டேட் சந்தித்து வருகிறது.
ட்விட்டர் பதிவுகளில் அநாவசியமான சர்ச்சைக்குரிய பதில்களை, உரையாடல்களைத் தவிர்க்க இந்த ஹைட் ரிப்ளைஸ் (Hide Replies) ஆப்ஷன் உதவும்.
இத்தகைய ஆப்ஷன் ஆன்லைன் நாகரிகத்தை வளர்க்க உதவும் என்கிறது ட்விட்டர்.
இந்த ஹைட் ரிப்ளைஸ் (Hide Replies) ஆப்ஷன் முதன்முதலில் கடந்த ஜூலை மாதம் கனடாவிலும், அடுத்தடுத்த மாதங்களில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் வெளியிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
மொபைல் மற்றும் இணையம் ஆகிய இரண்டு தளங்களிலும் இந்த அப்டேட்-க்கு நல்ல ஆதரவு கிடைத்ததால் தற்போது சர்வதேச அளவில் இதை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது ட்விட்டர்.