தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – ரஜினிக்கு மீண்டும் சம்மன்..!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு, மே-22ல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த் , இதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று கூறியிருந்தார்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கருத்து தெரிவித்தது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த பிப்ரவரி மாதம் ரஜினிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. 

அதன் படி, நேரில் ஆஜரான ரஜினி அதற்கு விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெகதீசன் ஆணையத்தின் வழக்கறிஞர் சேகர், ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்று தெரிவித்தார். அடுத்த மாதத்திற்குள் ரஜினியை விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே