”ரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார்”- அமைச்சர் செல்லூர் ராஜூ..!!

ரஜினியின் ஆலோசனை கூட்டம் குறித்து அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பாதியிலேயே தடைபட்டு நிற்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினி அரசியல் கட்சி தொடங்க இருந்த நிலையில் அது தள்ளிப்போனது.

இதையடுத்து கொரோனா காரணமாக மருத்துவர்களின் அறிவுரைப்படி பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த அவர் நாளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதையடுத்தே ரஜினியின் அரசியல் நகர்வு இருக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ரஜினி தெளிவான மனிதர் என்பதால் தெளிவான முடிவு எடுப்பார் என்று ரஜினியின் ஆலோசனை கூட்டம் பற்றி கருத்து தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், முதல்வருக்கு கிடைக்கும் நற்பெயரை தட்டி பறிக்க ஸ்டாலின் நினைக்கிறார் என்றார்.

அதேபோல் ரஜினியின் ஆலோசனை கூட்டம் குறித்த பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “அதிமுக வாக்கு வங்கியை யாராலும் சிதறடிக்க முடியாது.

மு.க. ஸ்டாலின் இருளில் இருப்பதால் அவர் விடியலை நோக்கி என பரப்புரை செய்கிறார் ” என்று விமர்சித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே