உருமாறிய கொரோனா – முதல்வர் பழனிசாமி வரும் 28ம் தேதி ஆலோசனை..!!

உருமாறிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பொதுமுடக்கம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவதால் கட்டுப்பாட்டை நீட்டிக்கலாமா என்றும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 8 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒரு கோடி பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 95 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் சில மாவட்டங்களில் தொற்று உறுதியாகி வருகிறது. 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் டிசம்பர் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் கட்டுப்படுத்தப்பட்டாலும் இங்கிலாந்தில் புதிய வீரியம் மிக்க கொரோனா பரவி வருகிறது. அங்கிருந்து இந்தியா வந்துள்ள 20 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் சளி மாதிரிகள் புனோவிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய உருமாறிய கொரோனா பற்றி தமிழ் நாட்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உருமாறிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பொதுமுடக்கம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவதால் கட்டுப்பாட்டை மேலும் நீட்டிக்கலாமா, தளர்வுகளை அறிவிக்கலாமா என்றும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே