திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது.
27ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பிரம்மோற்சவ கொடியேற்றத்தின் போது மலையப்ப சுவாமி சின்னசேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
பழனி புஷ்ப கைங்கர்ய சபை அனுப்பிய ஒரு டன் பூக்கள் இன்று பிரம்மோற்சவத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன.
வரும் செப்டம்பர் 22- ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆணடாள் சூடிக்கொடுத்த மாலையும், கிளியும் வழங்கப்பட உள்ளன.
வரும் 23- ஆம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார்.