டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி..!!

டிக் டாக் பிரபலமான ஜி.பி முத்து தற்கொலைக்கு முயன்றதால், அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிக் டாக் செயலி மூலமாக, மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஏராளம்.

அவர்களுள் திருச்செந்தூர், உடன்குடியை சேர்ந்த ஜி.பி.முத்துவும் ஒருவர்.

டிக் டாக் பிரபலமான சூர்யாவுடன் இணைந்து இவர் செய்த டிக் டாக்கும், எதார்த்தமான இவரது பேச்சும் celebrity என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரபலமாகி விட்டது.

மரக்கடை தொழில் செய்து வரும் இவர், பிசினஸ்ஸே 2ஆவது தான் டிக் டாக் தான் எனக்கு முக்கியம் என சொல்லும் அளவிற்கு டிக் டாக்கில் மூழ்கி கிடந்தார்.

காலையில் பல் துலக்குவது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை டிக் டாக்கையே உலகமாக நினைத்துக் கொண்டிருந்த ஜி.பி முத்து, டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதில் இருந்து பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். 

டிக் டாக் பிரபலங்கள் பலருக்கு செயலி தடை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஜி.பி முத்து பிரதமர் மோடிக்கே கோரிக்கை வைக்கும் அளவுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில், ஜிபி முத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

வயிற்று வலி காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், அவர் குடும்ப பிரச்னையால் தான் தற்கொலைக்கு முயன்றதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே