சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் – வைகோ அறிவிப்பு..!!

வரும் 2021 சட்டசபை தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வரும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக தமிழகத்தில் கருதப்படுகிறது.

ஜெயலலிதா, கருணாநிதி என்ற மாபெரும் ஜாம்பவான்கள் இல்லாத நிலை உள்ளது.

இந்த நிலையில் வரும் 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதனிடையே நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் களம் காணவுள்ளன.

இந்த நிலையில் நீட் தேர்வு, விவசாய மசோதா உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன.

இதை திமுக உள்ளிட்ட கட்சிகள் கையில் எடுக்கவுள்ளன.

இந்த நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியா என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் நிபுணர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு வைகோ கூறுகையில் சட்டசபை தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்றார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ தனி சின்னத்தில் போட்டியிட விரும்பியதாகவும் ஆனால் திமுக தலைமை அவரை உதயச்சூரியன் சின்னத்தில் போட்டியிட கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே