கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் பரிசோதனைக்கு தாமாக முன்வர வேண்டும் – ஓ.பி.எஸ் வேண்டுகோள் !!

கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சென்னை கோயம்பேடு சந்தை.

இங்குள்ள வியாபாரிகள் சிலருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த சில தினங்களாக நாள் ஒன்றுக்கு கோயம்பேடு சந்தை தொடர்புடைய நூற்றுக்கணக்கானோருக்கு தொற்று உறுதியாகும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த கோயம்பேடு சந்தை வியாபாரிகள், சந்தைக்கு சென்று வந்தவர்கள், அவர்களோடு தொடர்புடையவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொண்ட நிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே