உப்பு தூக்கலா சாப்பிடறவங்க கண்டிப்பா இதை படிச்சே ஆகணும்! அவ்ளோ விஷயம் இதில் இருக்கு!

உப்பு இல்லாத உணவுகள் சாப்பிடமுடியுமா? என்று கேட்கலாம். உப்பு நிறைந்த உணவுகளும் கூடசாப்பிட முடியாதுதான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
உப்பு. அவசியமானது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். ஆனால் முன்பு உணவின் மூலம் மட்டுமே உடலுக்கு உப்பு சத்து இருந்தது. இப்போது உணவை தாண்டி பல செயற்கை சுவையூட்டிகளின் கைங்கர்யத்தால் துரித உணவுகளின் மூலம் பெறப்படும் உப்பின் அளவு கூடுதலாக இருக்கிறது.
ஒரு நாளில் பெற வேண்டிய உப்பின் அளவை காட்டிலும் துரித உணவை அதிகமாக உட்கொள்பவர் பல நாளுக்கு தேவையான உப்பை ஒரே நாளில் பெற்றுவிடுகிறார்.
​உப்பிலும் பலவகை
இன்று உப்பிலும் பலவகை உண்டு. கல் உப்பு, தூள் உப்பு, இந்துப்பு, அயோடின் சேர்த்த உப்பு, அயோடின் சேர்க்காத உப்பு என்று பலவகைகள் உண்டு. இதில் எந்த உப்பு நல்லது என்று பார்ப்பதற்கு முன்பு எந்த உப்பாக இருந்தாலும் அவை அளவுக்கு அதிகமானால் ஆபத்தே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாள் ஒன்றுக்கு உடலுக்கு 2. 3 கிராம் முதல் 5 கிராம் வரை அளவு சோடியம் இருந்தாலே போதுமானது. மூன்று வேளை உணவையும் சேர்த்தால் இவ்வளவு உப்புதான் இருக்க வேண்டும். ஆனால் துரித உண்வுகளில் உப்பு தான் பிரதானமாக இருக்கிறது என்னும் போது இதன் அளவு அதிகமாகத்தான் இருக்கும்.

​உப்பு அதிகமாக இருக்கும் உணவுகள்
பீட்ஸா, பர்கர், சாண்ட்விச், சீஸ், சிப்ஸ் ரகங்கள் போன்ற நொறுக்குத்தீனிகளை உண்பவர்கள் கணக்கிலடங்காமல் உடலில் உப்பை ஏற்றிகொள்கிறார்கள்.

கருவாடு, ஊறுகாய், அப்பளம், வடகம் போன்றவற்றிலும் உப்பு அதிகமாகவே இருக்கிறது. சுத்தமான தண்ணீர் கிருமிகளை அழிக்ககூடியவை என்று சொல்லும் சுத்திகரிக்கப்பட்ட நீரில் கால்சியம் அகற்றி சோடியத்தை சேர்க்கிறார்கள். இந்த நீர் குடிக்கும் போது உடலில் மறைமுகமாக சோடியம் உடலில் சேர்கிறது. அதோடு பன், ரொட்டி, பன் போன்றவற்றிலும் சோடியம் பை கார்பனேட் சேர்க்கப்படுவதால் இவற்றின் மூலமும் அதிக உப்பு உடலில் சேர்கிறது.

​உப்பு உடலில் என்ன செய்யும்?
உடல் உழைப்பு இருக்கும் போது அதிகப்படியான உப்பு வியர்வை வழியாக வெளியேறி உப்பு தேவைக்கு ஏங்கி இருக்கும். ஆனால் உடல் உழைப்பும், வியர்வையும் இல்லாத சூழலில் உப்பு சேரக்கூடாது.

உப்பில் இருக்கும் சோடியமானது உடலின் நீர்த்துவ செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் முக்க்கிய பணீயை செய்கிறது. உடலின் வேறு பல பணிகளையும் சோடியம் செய்துகொண்டிருக்கிறது. உப்பின் அளவு அதிகரிக்கும்.போது உறுப்புகளுக்கு கூடுதல் சுமை கொடுக்கும் நிலையும் உண்டாகும்.

​உப்பு அதிகமானால் என்ன செய்யும்?
தூக்கலாக உப்பு சேர்த்து சாப்பிடுபவர்களின் உடலில் வயிற்றுப்புண், இதய சுவர் வீக்கம், சிறுநீரக கோளாறு, சிறுநீரகத்தில் கல், உடல் வீக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். உப்பு ரத்தத்தில் அதிகமாக இருக்கும். மேலும் யூரியா மற்றும் யூரிக் ஆசிட் போன்ற அமிலமும் அதிகரிக்கும்.

தீரா நோய்களை கொண்டிருப்பவர்கள் உடல் பருமன், நீரிழிவு, சிறுநீரக குறைபாடு பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் உப்பு அதிகம் சேர்த்தால் உடலில் கூடுதல் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.வளரும் பிள்ளைகள் சிறுவயது முதலே உப்பு சேர்த்து வந்தால் வளர்ந்த பிறகு இதர பிரச்சனைகளோடு எலும்பின் அடர்த்தி குறைபாட்டையும் அனுபவிப்பார்கள்.

அதோடு வயதான காலத்தில் சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும். இந்நிலையில் உப்பு அதிகமாகும் போது உடலில் நாளமில்லா சுரப்பிகள் தூண்டிவிட்டு சிறுநீரகங்கள், சிறுநீரை வெளியேற்றும் பணியை குறைக்கும். இதனால் உடலில் நச்சு நீர் வெளியேறாமல் உடலில் ஆங்காங்கே தேங்கிவிடும்.

​எந்த உப்பு நல்ல உப்பு
பலருக்கும் உண்டாகும் சந்தேகம் இதுதான். முதலில் கடல் உப்பை தான் பயன்படுத்தினார்கள். கடல் உப்பில் அயோடின் குறைபாடு இருப்பதால் தைராய்டு வருவதாக கண்டறியப்பட்டது. அதனால் அயோடின் கலந்து உப்பளங்களில் உப்பு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது எல்லோரும் இந்துப்பு பக்கம் கவனம் திருப்பியிருக்கிறார்கள். இந்துப்பு மலையடிவாரத்திலிருந்து பெறப்படுகிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள், 83 விதமான தாது உப்புகள் நிறைந்துள்ளன.
இந்துப்பில் வழக்கமான தூள் உப்பை காட்டிலும் சோடியம் குளோரைடின் அளவு குறைவாக இருக்கிறது. பொட்டாசியம் குளோரைடு அதிகமாக உள்ளது. உண்ணும் உணவு பொருளிலும் இவை கலந்திருப்பதால் இந்துப்பிலிருந்து தான் இவைபெறவேண்டும் என்பதில்லை. சோடியம் குளோரைடும், பொட்டாசியமும் நல்லது என்று அளவுக்கதிகமாக இந்துப்பை பயன்படுத்தினாலும் அவை சிறுநீரகம் தொடர்பான அறிகுறிகளை உண்டாக்கவே செய்யும். ஏனெனில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே