இது ரூ.15,000 பட்ஜெட்டை கலக்க போகுது; அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க!

விவோ நிறுவனம் அதன் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனான விவோ Y30 மாடலை கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் கடந்த மே மாத தொடக்கத்தில் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது விவோ ஒய்30 இந்தியாவிலும் வாங்க கிடைக்கும் என்று தெரிகிறது.
வெளியான தகவலானது விவோ ஒய்30 ஸ்மார்ட்போனின் விலையையும் நம்முடன் பகிர்ந்து கொண்டது. அதன்படி இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
வெளியான அறிக்கையில், விவோ Y30 ஸ்மார்ட்போனின் துல்லியமான இந்திய வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும் கூட அது “விரைவில்” நடக்கும் என்று அது கூறுகிறது.

இந்தியாவில் விவோ ஒய்30 ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) விலை:

விவோ ஒய்30 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலானது இந்தியாவில் ரூ.14,990 என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் முதலில் மலேசியாவில் தோராயமாக ரூ.15,800 க்கு அறிமுகமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அங்கே விவோ ஒய்30 ஸ்மார்ட்போன் ஆனது டாஸ்ல் ப்ளூ மற்றும் மூன்ஸ்டோன் ஒயிட் வண்ண விருப்பங்களில் வந்தது.
விவோ ஒய்30 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

இதன் அம்சங்களை பற்றி பேசுகையில், விவோ ஒய்30 ஆனது 6.47 இன்ச் எ;அளவிலான எச்டி+ “அல்ட்ரா ஓ ஸ்கிரீன்” டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 1560 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 19.5: 9 உயரமான திரை விகிதத்துடன் வருகிறது. அதன் மேல் இடது மூலையில் ஒரு பஞ்ச் ஹோல் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்எம் ப்ராசஸர் கொண்டு இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது. மேலும் இது மைக்ரோ எஸ்.டி ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை சேமிப்பை விரிவாக்கும் ஆதரவினையும் வழங்குகிறது. விவோ ஒய்30 ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் கைரேகை ரீடர் இடம்பெற்றுள்ளது.
கேமரத்துறையை பொறுத்தவரை இதில் க்வாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் போர்ட்ரெயிட் கேமரா + 2 மெகாபிக்சல் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
புதிய விவோ ஒய்30 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஃபன் டச் ஓஎஸ் கொண்டு இயங்குகிறது, மேலும் இது 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 10W சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, விவோ ஒய்30 ஆனது டூயல் சிம், டூயல் 4ஜி, வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் + க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் 162.04 x 74.46 x 9.11 மிமீ மற்றும் 197 கிராம் எடையும் கொண்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே