“ரஜினியிடமிருந்து என்னைப் பிரிக்க சதி நடக்கிறது” – தமிழருவி மணியன் பரபரப்பு புகார்..!!

நடிகர் ரஜினிகாந்திடமிருந்து தன்னை பிரிக்க சதி நடப்பதாக தமிழருவி மணியன் குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி துவங்குவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதே போல் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.

ரஜினியின் இந்த அறிவிப்பு வெளியாகும் போதே அர்ஜுனமூர்த்தி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் , தமிழருவி மணியன் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரபல ஊடகத்திற்கு தமிழருவி மணியன் அளித்துள்ள பேட்டியில், நடிகர் ரஜினிகாந்திடமிருந்து தன்னை பிரிக்க சதி நடக்கிறது . 

ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளரா இல்லையா என்பது குறித்து நான் எந்த ஊடகத்திடமும் பேசவில்லை என்று கூறியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரை விட ஆர்வமாக இருந்தவர் தமிழருவி மணியன் .

சென்னை போயஸ் இல்லத்திற்கு அடிக்கடி சென்று ரஜினியை சந்தித்து வந்த இவர் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என கூறிக்கொண்டே இருந்தார்.

இதனால் ரஜினியின் நம்பிக்கையை சம்பாதித்துள்ள இவருக்கு அவர் ஆரம்பிக்கப்போகும் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே