ஹைதராபாத் மாநகராட்சியில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை..!!

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் 80க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சியில் கடந்த 1-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில் 46.55 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 30 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் 8,152 பேர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முழுவதும் கண்காணிப்புக் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுகின்றன.

இதனிடையே தற்போது 11 மணி நிலவரப்படி ஹைதரபாத்தில் மொத்தமுள்ள 150 வார்டுகளில் 80-க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 

30-க்கும் அதிகமான இடங்களில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி முன்னிலை வகித்து வருகிறது.

அசாதுதீன் ஓவைசியின் கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே