“அங்கே பெரிய பிரச்சனை உள்ளது”, என்ன நடக்கிறது என்று பார்ப்போம் – அதிபர் டொனால்ட் டிரம்ப்

கடந்த சில மாதங்களாக இந்தியா-சீனா எல்லை பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. லடாக்கில் கல்வான் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாட்டின் ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது முதல் முறையாக இந்தியா சீனா இடையே நடக்கும் எல்லை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அதிபர் டிரம்ப் இரு நாட்டின் தலைவர்களுடனும் பேச்சு நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் தற்போது இடம் இந்தியா-சீனா எல்லை பிரச்சனை பற்றி அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருவதாக பேட்டி கொடுத்தார். தற்போது சமீபத்தில் கொடுத்த பேட்டியில் இது மிகவும் கடினமான நிலைமை. நாங்கள் இந்தியாவுடன் பேசுகிறோம், சீனாவுடன் பேசுகிறோம். அவர்களுக்கு அங்கே ஒரு பெரிய பிரச்சினை வந்துவிட்டது. அவர்கள் வீச்சுக்கு வந்துவிட்டார்கள், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவர்களுக்கு உதவ நாங்கள் முயற்சிக்கிறோம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே