6 மாத கர்ப்பிணியை கொன்ற கணவருக்கு தூக்கு தண்டனை – தேனி நீதிமன்றம் தீர்ப்பு..!!

தேனியில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்தவருக்கு தேனி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவரை சாகும்வரை தூக்கிலிட தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 மாத கர்ப்பமாக இருந்த மனைவி கற்பகவள்ளியை கொன்ற வழக்கில் குற்றாவளி சுரேஷுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

இவர் மனைவி கற்பகவள்ளியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் அடித்து உதைத்து வந்துள்ளார். 

6 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த கற்பகவள்ளியை கணவர் சுரேஷ், சரமாரியாக தாக்கியதில் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவி மற்றும் அவரின் வயிற்றில் இருந்த கருவை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கானது தேனி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் , சந்தேகத்தால் இரு உயிர்களை கொன்ற சுரேஷுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே