உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ மனைவி சோபி கிரகோயர் ட்ரூடோ பாதிக்கப்பட்டிருந்தார்.
மார்ச் 12-ம் தேதி பிரதமர் அலுவலகம் இதனை அறிவித்தது.
லண்டன் பயணம் முடித்து திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவர் குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதற்காக அறிகுறிகள் எதுவும் இல்லை.
இருந்தும் அவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.
கனடாவில் 5,655 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அங்கு 60 மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மனைவி சோஃபி கிரிகோயர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தன் நலனில் அக்கறை எடுத்துக்கொண்ட அனைவருக்கு நன்றி என சமூக வலைதளம் மூலம் ட்ரூடோவின் மனைவி கூறியுள்ளார்.
அவரது பதிவில், நண்பர்களுக்கு வணக்கம், என் உடல்நலம் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். நான் குணமடைந்துவிட்டேன் என மருத்துவரும் ஒட்டாவா சுகாதாரத்துறையினரும் கூறியுள்ளனர்.
என் நலத்தை விரும்பிய உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு என் அன்பை தெரியப்படுத்துகிறேன்.
இது ஒரு சவாலான நேரம். தனிமையில் இருப்பது அவ்வளவு எளிதானது இல்லை என்பது எனக்குத் தெரியும்.
நாம் எல்லோரும் சமூக விலங்கு என்னையும் சேர்த்துதான் கூறுகிறேன்.
உடல்ரீதியிலாக நாம் தனித்திருக்க வேண்டும் இதனால் யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டிய அவசியம் இல்லை.
சமூக வலைதளங்கள் மூலமாகவோ சாதாரண போன் அழைப்புகள் மூலவோ நாம் நம்முடைய அன்பானவர்களுடன் இணைந்திருக்கலாம்.
சமூக வலைதளங்கள் மூலம் இணைந்திருக்கலாம் நம் அன்பானவர்களுடன் மேலும் நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
இந்த நெருக்கடியான சூழலில் இருந்து அறிவியலும் இரக்கமும் நம்மை காக்கும் என முழுமையாக நம்புகிறேன்.
அதாவது, சுகாதாரத்துறையினர் சொல்வதைக் கேட்பது, அதன்படி நடப்பது மற்றும் வீட்டில் இருப்பது.
கோவிட் -19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவுவதைப் பார்க்கும்போது எனக்கு உத்வேகம் பிறக்கிறது.
அக்கம்பக்கத்தினர் அத்தியாவசிய பொருள்களை வாங்க உதவுகிறார்கள்.
உற்பத்தியாளர்கள் மக்களுக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு சேர்க்கிறார்கள். உலகத்துக்கு இப்போது இதுதான் தேவை எனத் தெரிவித்துள்ளார்.