சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

சேலம் – சென்னை 8 வழி சாலை திட்டத்தை அனுமதிக்கக்கோரி திட்ட மேலாளர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது இந்த விவகாரத்தை கண்டித்து தொடர்ச்சியாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாளைய தினம் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வருவது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில் கடந்த முறை இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பிராமண பத்திரங்களை தாக்கல் செய்தது.

இந்த விவகாரத்தில் குறிப்பாக சுற்றுச்சூழல் விதிகளில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நிலங்களை கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை.

மேலும் அதேநேரத்தில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த அவசியமில்லை என்ற முக்கிய தகவல்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் தான் கடந்த வாரம் இந்த வழக்கு மீண்டும் நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் நாளைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது மத்திய அரசு சுற்றுச்சூழல் விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றம் மற்றும் பல்வேறு விவகாரம் சம்பந்தமாக முக்கிய வாதங்களை முன்வைத்து சேலம் – சென்னை 8 வழி சாலை தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என கோரிக்கையும் முன்வைக்கப்படவுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே