இராமநாதபுரத்தில் திடீர் மழை…

தமிழகத்தில் வெப்பம் சலனம் காரணமாக தஞ்சாவூர், சிவகங்கை, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பொழியும் என வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இருப்பினும் மற்ற மாவட்டங்களில் அக்னி வெயில் கொளுத்தி வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இன்று காலை முதல் லேசான மழை பெய்ய தொடங்கியது. 

இந்த மழையானது சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட காய்கறி கடைகள் சேதமடைந்தன.

காய்கறிகள் மழைநீரில் மிதந்தன. இதனால் காய்கறி மற்றும் மீன் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இருப்பினும் இந்த திடீர் மழையால் பொதுமக்கள் வெயிலின் தாக்கம் குறைந்ததால் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே